போலி ஆதார், பான் கார்டுகள் வைத்திருந்தவர் கைது
புனேயில் போலி ஆதார், பான் கார்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மும்பையில் போலி ஆதார், பான்கார்டுகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்து வருவதாக தின்தோஷி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் புனேயை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான போலி ஆதார், பான்கார்டுகள், முக்கிய ஆவணங்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.