வயிற்றில் கத்தியால் குத்தியதில் சரிந்த குடல் பாகங்களை கையில் பிடித்தபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற வாலிபர்

வயிற்றில் கத்தியால் குத்தியதில் சரிந்த குடல் பாகங்களை கையில் பிடித்தபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-09-15 20:58 IST

தானே,

வயிற்றில் கத்தியால் குத்தியதில் சரிந்த குடல் பாகங்களை கையில் பிடித்தபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கத்தியால் குத்தினார்

டோம்பிவிலி பகுதியில் நேற்று முன்தினம் ஹர்ஷத் ரசால் (வயது 30) என்பவர் தனது மாமாவுடன் மினி பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனம் மீது மினி பஸ் மோதியதாக தெரிகிறது. இதனால் வாகனத்தை ஓட்டி வந்த பண்டித் மாத்ரே என்பவர் ஹர்ஷல் ரசாலிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கண்ட அவரது மாமா அவர்களின் சண்டையை விலக்க முயன்றார். அப்போது பண்டித் மாத்ரேவின் கூட்டாளிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். அப்போது, பண்டித் மாத்ரே தான் வைத்திருந்த கத்தியால் ஹர்ஷல் ரசாலின் வயிற்றில் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.

ஒருவர் கைது

இந்த கத்திக்குத்தில் ஹர்ஷல் ரசாலின் குடல் வெளியே சரிந்தது. இதனால் வலியால் அலறிய அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே சரிந்த குடல் பாகங்களை தனது கையில் பிடித்தபடி ஆஸ்பத்திரிக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பண்டித் மாத்ரேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்