தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற வாலிபர் குத்திக்கொலை- பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு

தாய் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-02-15 00:15 IST

தானே, 

தாய் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாக்குதல்

தானே மாவட்டம் பிவண்டி தாலுகா காராவலி கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபரின் தாய் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 56 வயது நபர் ஒருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் காலை சிறு பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்த உருட்டு கட்டையால் அப்பெண்ணை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாத பெண் சத்தம் போட்டு உள்ளார்.

சத்தம் கேட்ட வாலிபர் தனது தாயை காப்பாற்ற தாக்குதலை தடுக்க முயன்றார். அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் வாலிபரை குத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.

வாலிபர் பலி

மேலும் உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பெண்ணும் காயமடைந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தாய், மகன் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வாலிபரை குத்தி கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற நபரை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்