டிரைவரை கடத்தி கொன்ற வழக்கில் 10 ஆண்டுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் டிரைவரை கடத்தி கொன்ற வழக்கில் 10 ஆண்டுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது;

Update:2022-08-30 22:09 IST

வசாய்,

பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கடந்த 2012-ம் ஆண்டு முகமது நூசார் கான் (வயது 45) என்பவர் லாரியில் இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு வந்தார். அப்போது லாரியை வழிமறித்த கும்பல் டிரைவருடன் லாரியை கடத்தி சென்றனர். காவ்ரிபாடா பகுதியில் சென்ற போது டிரைவரை கும்பல் அடித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை அங்கேயே புதைத்து விட்டு லாரியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றனர்.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த காலியா என்ற சபீர் அலி (46) என்பவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. தற்போது அவர் நாலாச்சோப்ரா சாந்தி நகரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்