தானே ஓட்டலில் தங்கி இருந்த முதியவரை கொலை செய்த ஊழியர் கைது

தானே ஓட்டலில் தங்கி இருந்த முதியவரை கொலை செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-16 01:00 IST

தானே, 

தானே ரெயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் கடந்த மாதம் 27-ந்தேதி குஜராத்தை சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கூரிய ஆயுதத்தால் முதியவரை கொன்று டெபிட் கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ஓட்டலில் வேலை பார்த்து வந்த ராஜன் சர்மா (வயது20) என்பவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் ரத்னகிரி, கர்நாடகா போன்ற இடங்களில் பதுங்கி இருந்து இறுதியாக கோரக்பூர் வழியாக நேபாள நாட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது. இந்தநிலையில் அங்கு தலைமறைவாக இருந்த ராஜன் சர்மா கடந்த வாரம் மீண்டும் கோரக்பூர் திருப்பி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து அவரை பிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் முதியவரை கொன்று பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்