வல்சாட் கோர்ட்டில் ஊழியர் தற்கொலை முயற்சி
வால்சாட் கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற ஊழியரை பதிவாளர் தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து போலீசார் விசாரணை.;
சில்வாசா,
வல்சாட் மாவட்ட கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் விபின் சோலங்கி. இவர் அண்மையில் உமர்காவ் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இடமாற்றத்தில் விருப்பம் இல்லாததால், விபின் சோலங்கி நேற்று காலை கோர்ட்டு பதிவாளர் ஜிக்னேசை சந்தித்து முறையிட்டார். ஆனால் பலன் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த விபின் சோலங்கி, பதிவாளர் அறைக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த பதிவாளர் ஜிக்னேஷ் அவரை தடுத்து நிறுத்தினார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரில், போலீசார் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----