போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே கடந்த 7-ந்தேதி போக்குவரத்து போலீஸ்காரர் சுபாஷ் (வயது44) என்பவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வானங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாந்திரா பஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோ ஒன்று நின்றதை கண்டார். உடனே அதனை செல்போனில் படம் எடுத்ததுடன், அபராதம் விதிக்க இ-செல்லான் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார். இது பற்றி அறிந்த ஆட்டோ டிரைவர் ஆயூப் சேக் (35) போக்குவரத்து போலீஸ்காரர் சுபாஷிவிடம் தகராறில் ஈடுபட்டார்.
கைது
மேலும் ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீஸ்காரை தாக்கியதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி போக்குவரத்து போலீஸ்காரர் பாந்திரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயூப் சேக்கை கைது செய்தனர்.