செம்பூரில் விவாகரத்து கேட்ட மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

செம்பூரில் விவாகரத்து கேட்ட மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-09-28 01:45 IST

மும்பை, 

செம்பூரில் விவாகரத்து கேட்ட மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவர்

மும்பை செம்பூரை சேர்ந்தவர் இக்பால் சேக் (வயது36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜரா (20) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதுயுடைய குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி ஜரா கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்தார். தனக்கு விவாகரத்து தரும்படி கூறி இருந்தார்.

இதனால் ஆட்டோ டிரைவரான இக்பால் சேக் தனது 2 வயது குழந்தையை தன்னிடம் விட்டு செல்லும்படி தெரிவித்தார்.

மனைவி குத்தி கொலை

இந்த நிலையில் மனைவி ஜராவை நேற்று முன்தினம் காலை தன்னை சந்தித்து பேச வருமாறு தெரிவித்தார். இதனை நம்பிய ஜரா அங்கு வந்த போது தான் வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த ஜரா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து திலக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்