பாலாசாகேப் தோரட் தவறி விழுந்து காயம்

Update:2022-12-27 00:15 IST

மும்பை, 

நாக்பூரில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பாலாசாகேப் தோரட் எம்.எல்.ஏ. கலந்து கொண்டுள்ளார். நேற்று காலை அவர் நடைபயிற்சி சென்றபோது திடீரென தவறி விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டை மற்றும் அவரது நெற்றியில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறுகையில், " பாலாசாகேப் தோட்டின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்றார்.

பாலாசாகேப் தோரட்டின் குடும்ப டாக்டர், மும்பையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்