வங்கியில் ரூ.169 கோடி கடன் வாங்கி மோசடி- 4 பேர் மீது வழக்கு

Update:2022-12-15 00:15 IST

மும்பை, 

பாரத் ஸ்டேட் வங்கியின் பேக்பே ரெக்ளமேஷன் கிளை ஒன்றில் கடந்த 2010-15-ம் ஆண்டில் அந்தேரியை சேர்ந்த நிறுவனம் ரூ.169 கோடி கடன் வாங்கியது. இந்த ஆவணங்களை தணிக்கை செய்த போது அவை போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து வங்கியின் சீனியர் மேலாளர் சுரேஷ் என்பவர் சி.பி.ஐ. போலீசாருக்கு புகார் ஒன்று அளித்தார். இதன்படி சி.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தினர். வங்கியை ஏமாற்றும் நோக்கத்தில் கடன் பெற்று மோசடி நடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார் நிறுவன இயக்குனர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்