கோரேகாவில் பெஸ்ட் பஸ் கோவில் மீது மோதியது; 5 பேர் காயம்

கோரேகாவில் பெஸ்ட் பஸ் கோவில் மீது மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2022-08-10 22:59 IST

மும்பை,

மும்பை கோரேகாவில் நேற்று  பெஸ்ட் பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. சந்தோஷ்நகர் அருகே பஸ் வந்த போது திடீரென பஸ்சின் பிரேக் பழுதானது.

இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த கோவில் ஒன்றின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கண்டக்டர் அபாசாகேப் கோரே, டிரைவர் குண்டலிக் கோங்கடே மற்றும் 3 பயணிகள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்