சத்ரபதி சிவாஜி பற்றி அவதூறு பதிவிட்ட சிறுவன் கைது
சத்ரபதி சிவாஜி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
சத்ரபதி சிவாஜி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சத்ரபதி சிவாஜி பற்றி அவதூறு
மும்பையை அடுத்த பிவண்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பற்றி அவதூறாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், இந்தியாவின் அரசன் திப்பு சுல்தான் என கூறி சத்ரபதி சிவாஜியை அவதூறாக பதிவிட்டு இருந்தார். சிறுவனின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பலர் சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சிறுவன் கைது
இந்தநிலையில் சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட சிறுவன் மீது பிவண்டி சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் புகார் அளித்தார். புகாரில் சிறுவனின் பதிவு சத்ரபதி சிவாஜியை கடவுளாக வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
அவர் அளித்த புகாரின் போில் போலீசார் சிறுவன் மீது இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், குறிப்பிட்ட பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.