7 ரெயில் நிலையங்களில் தாய்பால் ஊட்டும் அறை - மத்திய ரெயில்வே தகவல்.
மும்பையில் உள்ள 7 முக்கிய ரெயில் நிலையங்களில் 13 தாய்பால் ஊட்டும் அறை அமைக்கப்படும் என மத்திய ரெயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.;
மும்பை,
மும்பையில் உள்ள 7 முக்கிய ரெயில் நிலையங்களில் 13 தாய்பால் ஊட்டும் அறை அமைக்கப்படும் என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சி.எஸ்.எம்.டி., எல்.டி.டி., தாதர், தானே, கல்யாண், பன்வெல், லோனாவாலா ஆகிய ரெயில் நிலையங்களில் தாய் பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனியறை அமைக்கப்பட உள்ளது. சி.எஸ்.எம்.டி., கல்யாண், பன்வெலில் தலா ஒரு அறையும், தானே, லோனாவாலாவில் தலா 2-ம், தாதர், எல்.டி.டி.யில் தலா 3 பால் ஊட்டும் அறைகளும் அமைக்கப்பட உள்ளது. அறையில் தாய்மார்களுக்கு வசதியாக பஞ்சு இருக்கை அமைக்கப்பட்டு இருக்கும். குழந்தைகளுக்கு டயாப்பர் மாற்ற தனியாக இடமும், மின்விசிறி வசதியும் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.