ஆட்டோ மீது கார் மோதி டிரைவர் பலி- போலீசார் விசாரணை

Update:2023-01-09 00:15 IST

தானே, 

தானே மான்பாடா பகுதியில் கடந்த 6-ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஆட்டோ டிரைவர் சிக்கி படுகாயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆட்டோவில் சிக்கி படுகாயமடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் நேற்றுமுன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியான ஆட்டோ டிரைவர் கல்வாவை சேர்ந்த சோபன் கல்பேர்(வயது57) என்பதும், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் ஜெய் மெட்கர்(27) என தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்