டாக்டரின் சொத்தை ஆக்கிரமித்த 4 பேர் மீது வழக்கு

போலி ஆவணங்கள் மூலம் டாக்டரின் சொத்தை ஆக்கிரமித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-10-16 00:15 IST

தானே, 

கல்வாவை சேர்ந்த 79 வயது டாக்டர் ஒருவர் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வந்தார். இதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்பத்திரியை மூடி விட்டார். இதன்பின்னர் அந்த இடத்தை வாடகைக்கு விட முடிவு செய்தார். இந்த நிலையில் 3 பேர் சேர்ந்து டாக்டரின் இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால் டாக்டர் கல்வா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்