பெண் போலீசை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு

Update:2023-05-27 00:30 IST

தானே, 

கல்யாணை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மும்பை போலீசில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சமூகவலைத்தளத்தில் புனேயை சேர்ந்த ராணுவ வீரரின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் செல்போன் மூலமாக இருவரும் பேசி வந்தனர். இதையடுத்து சம்பவத்தன்று பெண் போலீஸ், ராணுவ வீரரை சந்திக்க சென்றிருந்தார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனை குடித்த பெண் போலீஸ் மயங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ராணுவ வீரர் அவரை பலாத்காரம் செய்தார். மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த மே மாதம் வரையில் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இருப்பினும் தாமதித்ததால், திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீஸ் வற்புறுத்தினார். ஆனால் அவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணம் செய்ய ராணுவ வீரர் மறுப்பு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அவர் கொல்சேவாடி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்