பாந்திரா கோட்டையை படம் பிடித்த யூ-டியூபர் மீது வழக்குப்பதிவு

Update:2023-02-20 00:15 IST

மும்பை, 

மும்பை பாந்திரா பகுதியில் பழையான கோட்டை உள்ளது. அந்த கோட்டை 1640-ல் போர்சுகீசியர்களால் கட்டப்பட்டதாகும். கடல் வழியாக எதிரிகள் வருவதை கண்காணிக்க இந்த கோட்டையை அவர்கள் கட்டினர். கடந்த வியாழக்கிழமை கோட்டையை மர்ம டிரோன் படம் பிடித்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோட்டையை டிரோன் மூலம் படம் பிடித்தது 25 வயது யூ-டியூபர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பாந்திரா கோட்டையை உரிய அனுமதி இன்றி டிரோன் பயன்படுத்தி படம் பிடித்ததாக யூ-டியூபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்