மும்பை - சோலாப்பூர், ஷீரடி இடையேயான 'வந்தே பாரத்' ரெயிலுக்கு அமோக வரவேற்பு- மத்திய ரெயில்வே தகவல்

மும்பை - சோலாப்பூர், ஷீரடி இடையேயான வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதாக மத்திய ரெயில்வே ெதரிவித்து உள்ளது.;

Update:2023-03-27 00:15 IST

மும்பை, 

மும்பை - சோலாப்பூர், ஷீரடி இடையேயான வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதாக மத்திய ரெயில்வே ெதரிவித்து உள்ளது.

அமோக வரவேற்பு

மும்பை சி.எஸ்.எம்.டி. - ஷீரடி, சி.எஸ்.எம்.டி. - சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் ேசவையை பிரதமர் மோடி கடந்த மாதம் 10-ந் தேதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில்:-

சேவை தொடங்கப்பட்டு 32 நாட்களில் மும்பை - சோலாப்பூர், மும்பை - ஷீரடி வந்தே பாரத் ரெயிலில் 1 லட்சத்து 259 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.8 கோடியே 60 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

தனித்தனியாக கிடைத்த வருவாய்

இதில் மும்பை- சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலில் 26 ஆயிரத்து 28 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அவர்கள் மூலம் ரூ.2 கோடியே 7 ஆயிரம் வருவாய் கிடைத்து உள்ளது. சோலாப்பூர் - மும்பை ரெயிலில் 27 ஆயிரத்து 520 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 23 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

மும்பையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்த 23 ஆயிரத்து 296 பயணிகள் மூலம் ரூ.2 கோடியே 5 ஆயிரமும், ஷீரடியில் இருந்து மும்பைக்கு வந்த வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த 23 ஆயிரத்து 415 பயணிகள் மூலம் ரூ.2 கோடியே 25 லட்சமும் வருவாய் கிடைத்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்