மோசமான வானிலையால் முதல்-மந்திரி ஷிண்டே சென்ற ஹெலிகாப்டர் மும்பை திரும்பியது
மோசமான வானிலையால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் மும்பை திரும்பியது.;
மும்பை,
மோசமான வானிலையால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் மும்பை திரும்பியது.
மோசமான வானிலை
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று தனது சொந்த மாவட்டமான சத்தாராவுக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று மதியம் 12.30 மணியளவில் மும்பை ராஜ்பவன் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்டார். ஹெலிகாப்டர் சத்தாரா நோக்கி வானில் பறந்து கொண்டு இருந்தபோது, அவரது பயணத்தில் மோசமான வானிலை குறுக்கிட்டது. இதனால் ஹெலிகாப்டர் முன்னேறி செல்ல முடியவில்லை. உடனே விமானி ஹெலிகாப்டரை மீண்டும் மும்பைக்கு திரும்பினார். மும்பை ஜூகு ஏரோடிரமில் உள்ள தளத்தில் ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
மீண்டும் பயணம்
பின்னர் வானிலை சீரான பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்தாரா நோக்கி புறப்பட்டது. சத்தாரா நகர் அருகே உள்ள தாரே பகுதியில் உள்ள தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதன் பிறகு அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேற்கண்ட தகவலை முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.