டாக்சி சேவைகளுக்கு விதிகளை உருவாக்க குழு அமைப்பு

Update:2023-04-06 00:15 IST

மும்பை, 

மராட்டியத்தில் இணைய செயலி மூலமாக இயங்கும் டாக்சி சேவைகளுக்கான விதிகளை வகுக்க 6 பேர் கொண்ட குழுவை மராட்டிய அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை வெளியிட்ட அரசாணையில், "இந்த குழுவை அமைப்பதற்கான முடிவு பரிசீலனையில் இருந்தது. தற்போது மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல் விதிமுறை 2020-ஐ அமல்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதிர் குமார் ஸ்ரீவஸ்தவா குழுவின் தலைவராக இருப்பார். அடுத்த 3 மாதங்களுக்கு அவர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்