மும்பையில் புழுதி பரவலை கட்டுப்படுத்த கமிட்டி- மாநகராட்சி அமைத்தது
மும்பையில் காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில் புழுதி பரவலை கட்டுபடுத்த மாநகராட்சி கமிட்டி அமைத்து உள்ளது.;
மும்பை,
மும்பையில் காற்று மாசு அதிகரித்து உள்ள நிலையில் புழுதி பரவலை கட்டுபடுத்த மாநகராட்சி கமிட்டி அமைத்து உள்ளது.
கமிட்டி அமைப்பு
மும்பையில் குளிர்காலத்தின் போது இதுவரை இல்லாத அளவில் காற்று மாசு அதிகமாக இருந்தது. பல நாட்கள் டெல்லியை விட மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருந்தது. தற்போது நகரில் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. ஆனாலும் காற்றின் தரம் மோசமாகவே உள்ளது. வான்பகுதியில் புழுதி சூழ்ந்து இருப்பதை காணமுடிகிறது.
இந்தநிலையில் மும்பையில் தூசி, புழுதி பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூற மும்பை மாநகராட்சி கமிட்டி அமைத்து உள்ளது. கமிட்டிக்கு கூடுதல் கமிஷனர் சஞ்சீவ் குமார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 நாட்களுக்குள் அறிக்கை
இந்த கமிட்டி புழுதி பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், புழுதி பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வரும் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். மாநகராட்சியின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.