பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கவர்னர், முதல்-மந்திரி- தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு கவர்னர், முதல்-மந்திரி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;

Update:2022-12-31 00:15 IST

மும்பை, 

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு கவர்னர், முதல்-மந்திரி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று மரணம் அடைந்தார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி:-

ஹீராபென் மோடி ஒரு கனிவான, அக்கறையுள்ள மற்றும் அன்பான தாய். அவர் பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு உன்னத மகனை உலகிற்கு அளித்தார். ஹீராபென் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்.

அந்த தாய்க்கு அமைதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-மந்திரி ஷிண்டே:-

ஹீராபென் போன்ற அமைதியான, அன்பான குணம் கொண்ட ஒருவரின் மரணம் இந்த சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

மகன் என்ற முறையில் இந்த இழப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாயின் இழப்பு என்பது துயரத்தின் எல்லையாகும். பிரதமரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

துணை முதல்-மந்திரி பட்னாவிஸ்:-

மதிப்பிற்குரிய பிரதமரின் தாய் ஹீராபென் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

ஒருவருடன் தாய் இல்லாததை விட மிகபெரிய துன்பம் இவ்வுலகில் இல்லை. இந்த நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார்:-

ஒரு நூற்றாண்டு தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு வாழ்க்கையின் பயணம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

பிரிவின் வலி பெரியது, அதை தாங்கும் வலிமை பிரதமருக்கு கிடைக்கட்டும். பிரதமர் மற்றும் அவரது துயரத்தில் பங்கு கொள்கிறோம். மறைந்த ஹீராபென்னுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி.

சரத்பவார்:-

பிரதமர் மோடி அவர்களே உங்கள் தாயார் காலமானதை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன். இது வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரது ஆன்மா அமைதியான இடத்தில் இளைப்பாறட்டும்.

சஞ்சய் ராவத் எம்.பி. :-

தாயின் நிழலை இழப்பது போன்ற அனாதை நிலை வேறு இல்லை. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஹீராபென்னின் ஆத்மா சந்தி அடையட்டும். பிரதமர் மோடி குடும்பத்தின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். 

மேலும் செய்திகள்