மும்பை,
மும்பையில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதிதாக 10 சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது.
மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு, மேற்கு புறநகர் மாநகராட்சி அதிகாரி டாக்டர் சஞ்சீவ் குமார் மற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் மகேஸ்வரி இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அவர்கள் பரிமாறி கொண்டனர்.