மும்பை,
மராட்டியத்தில் கொரோனாவால் நேற்று 226 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 550 ஆக இருந்த நிலையில், அது தற்போது அதிரடியாக வீழ்ந்துள்ளது. புதிதாக யாரும் உயரிழக்கவில்லை. இதேபோல நேற்று மட்டும் சுமார் 505 நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் தொற்றில் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 776 ஆக குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 59 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பிறகு முதல்முறையாக தொற்று பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் கூட மும்பையில் 141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 61 ஆயிரத்து 946 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 761 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.