ஜவகரில் பெற்ற குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய் கைது- குப்பையில் வீசப்பட்ட உடல் மீட்பு

ஜவகரில் பெற்ற குழந்தையை கொலை செய்து நாடகமாகடிய தாயை போலீசார் கைது செய்தனர். குப்பையில் வீசப்பட்ட உடலை போலீசார் மீட்டனர்.;

Update:2022-09-21 10:30 IST

வசாய்,

ஜவகரில் பெற்ற குழந்தையை கொலை செய்து நாடகமாகடிய தாயை போலீசார் கைது செய்தனர். குப்பையில் வீசப்பட்ட உடலை போலீசார் மீட்டனர்.

உடல் மீட்பு

பால்கர் மாவட்டம் ஜவகர் பகுதியை சேர்ந்தவர் அப்சானா (வயது37). இவரது 3 வயது மகள் சனா. நேற்று முன்தினம் மாலை மகள் சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பை குவியலில் வீசி விட்டார். இதையடுத்து தனது மகள் காணாமல் போனதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து நாடகமாடினார்.

இதனை நம்பிய அவர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி வந்தனர். அப்போது குப்பை குவியலில் பிளாஸ்டிக் பையில் சுற்றி இருந்த சிறுமியின் உடல் கிடந்ததை கண்டு பிடித்தனர்.

தாய் கைது

இது பற்றி போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் உடலில் காயங்கள் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அப்சானாவை கைது செய்தனர். பெற்ற மகளை கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொலை செய்து விட்டு பெற்றோரிடம் நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்