இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-15 22:29 IST

தானே, 

டோம்பிவிலியில் உள்ள கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயது இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்யும் முன்பு அப்பெண் எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு சிக்கியது. இதில் நண்பர்கள் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில்,   இளம்பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்ததாக பெண் உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள். இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், 8 பேரையும்  கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்