ஏக்நாத் ஷிண்டே- உத்தவ் தாக்கரே சந்திக்க வாய்ப்பு
சிவசேனா பிளவுக்கு பிறகு முதல் முறையாக ஏக்நாத் ஷிண்டே- உத்தவ் தாக்கரே சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.;
நாக்பூர்,
சிவசேனா பிளவுக்கு பிறகு முதல் முறையாக ஏக்நாத் ஷிண்டே- உத்தவ் தாக்கரே சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
சிவசேனாவில் பிளவு
சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி அணியின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியும், பா.ஜனதாவும் இணைந்து ஆட்சியை கைப்பற்றின.
இந்த அரசியல் மாற்றத்திற்கு பிறகு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் நேரில் சந்தித்துகொள்ளவில்லை. கடந்த சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த சந்திப்பு நிகழவில்லை.
நாக்பூர் வருகை
இந்தநிலையில் நாக்பூரில் நடைபெறும் குளிர்கால கூட்டதொடரில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொள்வார் என்பதை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று விமானம் மூலமாக நாக்பூருக்கு உத்தவ் தாக்கரே வந்தார். அவரை கட்சியினர் வரவேற்றனர்.
இதன்மூலம் சிவசேனா பிளவுக்கு பின்னர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், உத்தவ் தாக்கரேவும் முதல் முறையாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.