புனேயில் மனைவி, மகனை கொன்று சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தற்கொலை

புனேயில் மனைவி, மகனை கொன்று விட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-16 00:15 IST

புனே, 

புனேயில் மனைவி, மகனை கொன்று விட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

3 பேர் பிணமாக மீட்பு

புனே அவுந்த் பகுதியில் வசித்து வந்தவர் சுதீப்தோ கங்குலி (வயது44). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியங்கா. தம்பதிக்கு 8 வயதில் தன்ஷிகா என்ற மகன் இருந்தான். சுதீப்தோ கங்குலியின் தம்பி பெங்களூருவில் உள்ளார். அவர் அண்ணன், அண்ணிக்கு போன் செய்தார். பலமுறை போன் செய்தும் 2 பேரும் எடுக்கவில்லை.

எனவே அவர் புனேயில் வசிக்கும் நண்பரை, அண்ணன் வீட்டுக்கு அனுப்பினார். அப்போது வீடு பூட்டியிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மாற்றுச்சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது சுதீப்தோ கங்குலி தூக்கில் பிணமாக தொங்கினார். பிரியங்காவும், மகன் தனிஷ்காவும் தலையில் பிளாஸ்டிக் பை மூடிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

கொலை, தற்கொலை

போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுதீப்தோ கங்குலி முதலில் மனைவி, மகனை கொலை செய்து விட்டு பின்னர் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சுதீப்தோ கங்குலி சமீபத்தில் வேலையை விட்டு உள்ளார். அவர் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டு உள்ளார். வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் புனேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்