நகைக்கடையில் ரூ.6½ லட்சம் தங்கம் திருடிய ஊழியருக்கு வலைவீச்சு

Update:2023-04-20 00:15 IST

மும்பை,

மும்பை மலாடு பகுதியில் உள்ள நகைக்கடையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷரிப் மாலிக் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடை மேலாளர் கடந்த 16-ந் தேதி கடையை ஷரிப் மாலிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றார். கடையில் ஷரிப் மாலிக் மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் அன்று இரவு முதல் ஷரிப் மாலிக் மாயமானார். சந்தேகமடைந்த மேலாளர் நகைக்கடை லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்பிலான 123 கிராம் தங்கம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து நகைக்கடை மேலாளர் மலாடு போலீசில் புகாா் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஊழியர் ஷரிப் மாலிக் ரூ.6½ லட்சம் தங்கத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தங்கத்தை திருடிய கடை ஊழியரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்