மும்பை,
மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுனில் தட்காரேயின் சட்டமன்ற உரைகள் பற்றிய புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று கலந்துகொள்ள இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அவரால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக அஜித்பவார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதுகுறித்து அஜித்பவார் கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு நாளை(இன்று) கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சைக்காக அவர் தன்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்து கொண்டதால் நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தனது ஒரு கண்ணிற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.