குஜராத் பாகிஸ்தானில் இல்லை- எதிர்க்கட்சிகளுக்கு பட்னாவிஸ் பதிலடி

வேதாந்தா தொழில் முதலீடு விவகாரத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.;

Update:2022-09-16 23:11 IST

மும்பை,

வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து மராட்டியத்தில் அமைக்க இருந்த பிரமாண்ட செமி கன்டெக்டர் ஆலை திட்டம் குஜராத்திற்கு கைநழுவி சென்றது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

செமிகன்டக்டர் நிறுவனத்தை குஜராத்திற்கு மாற்றும் திட்டம் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை மராட்டியத்திற்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். எதுவும் செய்யாதவர்கள் எங்களை நோக்கி விரல் நீட்டுகின்றனர். மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் மராட்டியம் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் குஜராத்தை விட பின்தங்கி விட்டது. குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. இது எங்கள் சகோதர மாநிலம். இது அரோக்கியத்தனமான போட்டி. கர்நாடகாவை விட நாங்கள் அனைவரும் முன்னேற விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்