மும்பை,
பிரபல தாதா அருண் காவ்லி பைகுல்லா தகிடி சால் பகுதியை சேர்ந்தவர். 1990-களில் தகிடி சாலில் அவர் தங்கியிருந்த 3 மாடி கட்டிடம் மிகவும் பிரபலமான இடமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தகிடி சாலில் அருண் காவ்லி தங்கி இருந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் 3 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை சுமார் 1 மணி நேரத்தில் அணைத்தனர்.
விபத்தின் போது கட்டிடத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.