மானஸ்ரோவர் ரெயில் நிலையம் அருகே தீ விபத்து: 34 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மானஸ்ரோவர் ரெயில் நிலையம் அருகே எற்பட்ட தீ விபத்தில் 34 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.;
மும்பை,
நவிமும்பை மானஸ்ரோவர் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதன்பின் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மற்ற மோட்டார் சைக்கிளில் தீபற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனதால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் வரும் முன்பே அங்கிருந்த 34 மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயால் எரிந்து நாசமானது. அங்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.