பெண்களிடம் உல்லாசமாக இருந்தால் சம்பாதிக்கலாம்:- மும்பை வாலிபரிடம் ரூ.76 ஆயிரம் அபேஸ்

பெண்களிடம் உல்லாசமாக இருந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றுக்கூறி மும்பை வாலிபரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் அபேஸ் செய்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-10-16 00:15 IST

மும்பை,

பெண்களிடம் உல்லாசமாக இருந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றுக்கூறி மும்பை வாலிபரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் அபேஸ் செய்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் விளம்பரம்

மும்பை செம்பூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் கார்களை கழுவும் வேலை பார்த்து வந்தார். இதில் போதுமான வருமானம் கிடைக்காததால் வேறு வேலையை தேடினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ஆன்லைனில் வேலையை தேடியபோது, அதில் இருந்த விளம்பரத்தை கண்டார்.

இதில் பெண்களிடம் உல்லாசமாக இருக்கும் ஆண்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய வாலிபர் அதில் இருந்த நம்பரை தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் சனம் என்ற பெண் பேசிய போது தாங்கள் எஸ்காட் சர்வீஸ் நடத்தி வருவதாகவும், இதில் சேரும் வாலிபர்கள் பெண்களிடம் உல்லாசமாக இருக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். உல்லாசத்துக்கு பிறகு அப்பெண்கள் உங்களுக்கு தேவையான பணத்தை வழங்குவார்கள் எனவும், இதற்காக தங்களிடம் உறுப்பினராக சேர ரூ.1,000 தர வேண்டும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

ரூ.76 ஆயிரம் அபேஸ்

இதற்கு விருப்பம் தெரிவித்த வாலிபர் பணத்தை செலுத்தி உள்ளார். இதன்பின்னர் வெவ்வேறு கட்டங்களில் வாலிபரிடம் இருந்து ரூ.76 ஆயிரத்தை அப்பெண் அபேஸ் செய்தார். இருப்பினும் உல்லாசத்திற்காக பெண்ணின் தொடர்பு நம்பர் வாலிபருக்கு கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் உள்பட மோசடி கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்