மும்பையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.696 குறைவு

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.696 குறைந்து, ஒரு பவுன் ரூ.47 ஆயிரத்து 304 ஆக விற்கப்பட்டது.;

Update:2023-03-23 00:15 IST

மும்பை, 

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.696 குறைந்து, ஒரு பவுன் ரூ.47 ஆயிரத்து 304 ஆக விற்கப்பட்டது.

தங்கம் விலை

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் சற்று குறைந்து, அதன் பின்னர் 'கிடுகிடு'வென அதிகரித்தது. அதன்படி, கடந்த 19-ந் தேதி விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று முன்தினம் மீ்ண்டும் அதிகரித்து கிராமுக்கு ரூ.72-ம், பவுனுக்கு ரூ.576 உயர்ந்தது. ஒரு பவுன் 24 கேரட் கொண்ட தங்கம் (8 கிராம்) ரூ.48 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.

உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதன் காரணமாக விலை ஏற்றத்துடன் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று மாலை அதிரடியாக குறைந்து இருந்தது.

பவுனுக்கு ரூ.696 குறைவு

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.87-ம், பவுனுக்கு ரூ.696-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 913-க்கும், ஒரு பவுன் ரூ.47 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று இறங்குமுகத்தில் இருந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.47 ஆயிரத்திற்கு நெருங்கி வந்து உள்ளது.

தங்கம் விலையில் எப்போதெல்லாம் மாற்றம் இருக்கிறதோ, அப்போது வெள்ளி விலையிலும் மாற்றம் இருக்கும். அந்தவகையில் நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60-க்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்