நாசிக்,
நாசிக் சாந்த்வாட் தாலுகா மேடேவாடி சிவார் பகுதியில் இருந்து 13 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று மன்மாட் நோக்கி சென்றது. அப்போது பஸ் வழியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் யுவராஜ் லகிரே (வயது40), பயணி சங்கீதா பகவத் (40) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.