திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற காவலாளி கைது

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-02-17 00:15 IST

தானே, 

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

உடல் மீட்பு

நவிமும்பை கோபர்கைர்னே ஹவுசிங் சொசைட்டி அருகே உள்ள புதரில் பெண்ணின் உடல் கிடப்பதாக கடந்த 12-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். 35 முதல் 40 வயதுயுடைய பெண் எனவும், துப்பட்டா மூலம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்து உடலை வீசி சென்றதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி காணாமல் போன பெண்ணின் விபரங்களை சேகரித்தனர்.

துப்புரவு பெண் பணியாளர்

இதில் மும்பை டிராம்பே போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன்படி விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். இதில் மான்கூர்டு பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த பெண் என தெரியவந்தது.

இவரது செல்போன் நம்பரில் நடத்திய ஆய்வில் காவலாளி ராஜ்குமார் பால்(வயது40) என்பவர் கடைசியாக தொடர்பு கொண்டதை அறிந்தனர். போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் தான் பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

திருமணத்திற்கு வற்புறுத்தல்

போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவலாளியை கைது செய்தனர். இவருக்கும் அப்பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். மேலும் தன்னை திருமணம் செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்ததால் பெண்ணை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

சம்பவத்தன்று தான் வேலைபார்க்கும் கோபர்கைர்னை இடத்திற்கு பெண்ணை வரவழைத்தார். ஹவுசிங் சொசைட்டி வளாகம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீசி சென்றதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்