போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட இந்தி நடிகை விடுவிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட நடிகை கிரிசன் பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளார்.;

Update:2023-06-14 00:15 IST

மும்பை, 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட நடிகை கிரிசன் பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள்

சார்ஜாவில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த மும்பையை சேர்ந்த இந்தி நடிகை கிரிசன் பெரேரா (வயது 27) போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு 25 நாட்கள் சார்ஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுதலையானார்.

துபாயில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தபோது, தான் கொண்டு வந்த உடமைகளில் 41.7 கிராம் அளவிலான போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தனக்கு தெரியாது என கூறினார். மேலும் வழக்கு விசாரணையின் போது, தான் இதில் சிக்க வைக்கப்பட்டதாக கூறினார்.

அமீரகத்தை பொறுத்தவரையில் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனையடுத்து நடிகையின் மீது வழக்கு மிகவும் கடுமையாக்கப்பட்டது.

விடுவிப்பு

பிறகு நடந்த பல்வேறு வழக்கு விசாரணைகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆதாரமாக வைக்கப்பட்டது. இதில் கிரிசன் பெரேராவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் முகம்மது அல் ரெதா கூறினார். நேற்று அவர் அளித்த பேட்டியில், கிரிசனுடைய பெயர் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப பெறுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்