ராஜ்தாக்கரேக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை- மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.;
மும்பை,
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடுமையான இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மும்பை லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலையில் அவருக்கு டாக்டர்கள் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 1 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆனது.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியதாவது:-
3 மாதங்களில்..
ராஜ்தாக்கரேக்கு இடுப்பு மோசமாக சேதமடைந்ததால், அவர் கடுமையான வலியை அனுபவித்தார். அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படும்.இந்த சிகிச்சை சுமார் 6 நாட்கள் செய்யப்படும்.
எல்லாம் சரியாக நடந்தால் மற்றும் அவரது கால்கள் அவரது எடையைத் தாங்க முடிந்தால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவர் வழக்கமான பணிகளை தொடங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், ராஜ் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக அயோத்தி பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.