இஜாஸ் லக்டாவாலாவின் கூட்டாளி கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இஜாஸ் லக்டாவாலாவின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-03 23:22 IST

மும்பை, 

மும்பையில் நிழலுலக தாதாவாக இருந்தவர் இஜாஸ் லக்டாவாலா. இவரது கூட்டாளியான நிலேஷ் வில்லியம் (வயது35) என்பவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற பல வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான நிலேஷ் வில்லியம் தென்மும்பை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அங்கு வந்த நிலேஷ் வில்லியமை அடையாளம் கண்ட போலீசார் பிடித்து கைது செய்தனர். இதன்பின்னர் வழக்கு விசாரணைக்காக காஷிமிரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்