சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் ஷீசன் கான் தலைமுடியை வெட்டிக்கொள்ள தேவையில்லை- கோர்ட்டு உத்தரவு

சிறையில் இருந்து வரும் ஷீசன் கான் தலைமுடியை வெட்டிக்கொள்ள ஒரு மாதம் விலக்கு அளித்து கோர்ட்டு அனுமதி அளித்தது.;

Update:2023-01-04 00:15 IST

பால்கர், 

சிறையில் இருந்து வரும் ஷீசன் கான் தலைமுடியை வெட்டிக்கொள்ள ஒரு மாதம் விலக்கு அளித்து கோர்ட்டு அனுமதி அளித்தது.

கோர்ட்டில் மனு

பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள நைகாவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் கடந்த மாதம் 24-ந் தேதி டி.வி. நடிகை துனிஷா சர்மா (வயது 21) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு காரணம் சக நடிகர் ஷீசன் கான் (28) என தெரியவந்தது. அவரை கைது செய்து வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வரும் நடிகர் தான் நடிக்கும் தொலைகாட்சி தொடருக்காக தனது தலைமுடி தோற்றத்தை பராமரிக்கும் வகையில் சிறையில் முடி வெட்டுவதில் இருந்து விலக்கு தருமாறு வசாய் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஒரு மாதம் விலக்கு

இந்த மனு தொடர்பாக அவரது வக்கீல் ஷரத் ராய் வாதாடினார். வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு எஸ்.டி. ஹெர்குடே பிறப்பித்த உத்தரவில், தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஷீசன் கானை ஒரு மாத காலத்திற்கு முடி வெட்டும்படி வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்படும் சீக்கிய கைதிகள் மட்டுமே தலைமுடியை நீளமாக வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஷீசன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

---------------------------

Tags:    

மேலும் செய்திகள்