ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி கைது

ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது.;

Update:2023-01-07 00:30 IST

மும்பை,

ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது.

2 பான் கார்டு

மும்பையை சேர்ந்த வியாபாரி ஒருவர் 2 பான் கார்டுகளை வைத்து இருந்தார். அதில் ஒரு கார்டை ரத்து செய்ய விரும்பினார். சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரி உமேஷ்குமார் வியாபாரியை தொடர்பு கொண்டார். அவர் 2 பான் கார்டு வைத்திருந்த குற்றத்துக்காக வியாபாரியை ஜெயிலில் போட முடியும் என மிரட்டினார். மேலும் வியாபாரியின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டார்.

வருமான வரித்துறை அதிகாரி கைது

இதுகுறித்து வியாபாரி சி.பி.ஐ.யில் புகார் அளித்தார். சி.பி.ஐ. கொடுத்த யோசனையின்படி வியாபாரி, வருமான வரித்துறை அதிகாரி உமேஷ் குமாரை சந்தித்து ரூ.8 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு சென்ற சி.பி.ஐ. லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரி உமேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்