சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை - முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி

புல்தானா அருகே சம்ருத்தி விரைவு சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.;

Update:2023-07-02 01:15 IST

மும்பை, 

புல்தானா அருகே சம்ருத்தி விரைவு சாலையில் தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து தீயில் எரிந்ததில் 25 பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

சம்ருத்தி விரைவு சாலையில் சமீப காலமாக பல விபத்துகள் பதிவாகி உள்ளது. எனவே புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு ஆலோசனை நடத்தும். இந்த விபத்துகளுக்கான சரியான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், " சம்ருத்தி விரைவு சாலை அமைத்தது தான் விபத்துக்கு காரணம் அல்ல. இதுவரை நடத்த விபத்துகளுக்கு மனித தவறும், வாகன தவறும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. சாலையில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கவும், மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்