போலீஸ்காரர் மீது காரை மோதியவருக்கு 2 ஆண்டு கடுங்காவல்- கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு

போக்குவரத்து போலீஸ்காரர் மீது காரை மோதிய வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update:2022-08-30 21:34 IST

தானே,

போக்குவரத்து போலீஸ்காரர் மீது காரை மோதிய வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

போலீஸ்காரர் மீது மோதியது

கல்யாண் ஆதார்வாடி பகுதியை சேர்ந்தவர் அஜித் தாக்கரே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி காரில் புறப்பட்டு வெளியே சென்றார். அப்போது சாலை விதிமுறை மீறி எதிர்புற சாலையில் காரை ஓட்டி வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ரவீந்திர தேஷ்முக் என்பவர் இதனை கண்டு காரை நிறுத்துமாறு அவரிடம் தெரிவித்தார்.

ஆனால் அஜித் தாக்கரே காரை நிறுத்தாமல் போலீஸ்காரர் மீது மோதி விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தினால் போலீஸ்காரர் ரவீந்திர தேஷ்முக் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதால் உயிர் பிழைத்தார்.

2 ஆண்டு கடுங்காவல்

இது பற்றி பஜார்பேட் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய அஜித் தாக்கரேவை கைது செய்தனர். மேலும் அவர் மீது கல்யாண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட நீதிபதி சவுகத் கோட்வாடே முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குற்றவாளியான அஜித் தாக்கரேவிற்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்