விவசாய தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

Update:2023-02-05 00:15 IST

லாத்தூர், 

லாத்தூர் மாவட்டம் அவுசா தாலுகாவில் உள்ள போர்பால் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவ் சுகாவே. இவரது விவசாய நிலத்தில் ராம் யாதவ் என்பவர் விவசாய தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நீண்டகாலமாக ராம் யாதவுக்கு, மகாதேவ் சுகாவே சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. எனவே தொழிலாளி தொடர்ந்து தனது சம்பளத்தை கேட்டு வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மகாதேவ் சுகாவே சம்பவத்தன்று ராம் யாதவுக்கு சம்பளம் தருவதாக கூறி தனது விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று கடையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மகாதேவ் சுகாவேவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு லாத்தூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவில் தீர்ப்பு அளித்த நீதிபதி, குற்றவாளி மகாதேவ் சுகாவேக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் வித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்