தாய், மகனை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை
பால்கரில் தாய், மகனை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;
மும்பை,
பால்கரில் தாய், மகனை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தாய், மகன் கொலை
பால்கர் மாவட்டம் மனோர் தாலுகா பார்லேபாடா பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரத் தேவு (வயது33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாகாராம் லட்சுமணுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. சரத் தேவு மீது சாகாராம் லட்சுமண் போலீசிலும் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி காலை சரத் தேவுக்கும், சாகாராம் லட்சுமணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரத் தேவு, சாகாராம் லட்சுமணை சரமாரியாக கட்டையால் தாக்கினார்.
தடுக்க வந்த சாகாராம் லட்சுமணின் தாய் லட்சுமி, மனைவி சுசித்தாவையும் தாக்கினார். படுகாயமடைந்த சாகாராம் லட்சுமண், அவரது தாய் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சுசித்தா சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விவசாயி சரத் தேவுவை கைது செய்தனர். வழக்கு மீதான விசாரணை பால்கர் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் தேஷ்பாண்டே முன்விரோதத்தில் தாய், மகனை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.