தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;

Update:2023-01-01 00:15 IST

தானே, 

தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தொழிலாளி கொலை

தானே மாவட்டம் ரேமண்ட் மைதானம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக 28 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். வாலிபருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்தவர்களுக்கும் நிறுவன கழிவறைகளை சுத்தம் செய்வது தொடர்பாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கல்லால் தாக்கினார். இதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வாலிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது வாலிபர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி அபய் மந்திரி தீர்ப்பு கூறினார். அப்போது, உடன் வேலை பார்க்கும் தொழிலாளியை கொலை செய்த 28 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்