போலி நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விட முயன்றவர் கைது

மலாடில் போலி நாணயங்கள் தயாரித்து புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி நாணயங்களை பறிமுதல் செய்தனர்.;

Update:2023-02-04 00:15 IST

மும்பை, 

மலாடில் போலி நாணயங்கள் தயாரித்து புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி நாணயங்களை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

மும்பையில் போலி நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் டெல்லி போலீசார் இது குறித்து மும்பை போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் 2 மாநில போலீசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மும்பை மலாடு வல்லப் கட்டிடத்தில் உள்ள வீட்டில் போலி நாணயங்கள் தயாரித்து புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஒருவர் சிக்கினார்

இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி நாணயங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தின்தோஷி போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வீட்டில் இருந்த ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட முயன்றதாக செய்திகள் வலம் வரும். தற்போது நாணயங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்