கொள்ளை முயற்சியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கொள்ளை முயற்சியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;

Update:2022-09-17 19:45 IST

தானே, 

கொள்ளை முயற்சியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

கத்தியால் குத்தி கொலை

சிந்துதுர்க் மாவட்டம் கன்காவிலி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர தால்வி (வயது50). இவர் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் தானே மாவட்டம் டோம்பிவிலிக்கு வந்தார். இதில் அவர் 7-ந் தேதி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சந்தீப் ஜோகிந்தர் ஜா என்ற பட்ல்யா என்ற கொள்ளையன், மகேந்திர தால்விடம் கொள்ளையடிக்கும் முயற்சியில் அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மகேந்திர தால்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்ல்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு கொள்ளை முயற்சியின் போது மகேந்திர தால்வியை கத்தியால் குத்தி கொலை செய்த பட்ல்யாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்