முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பீகாரில் கைது

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பீகாரில் போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-07 00:15 IST

மும்பை, 

மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் போன் செய்த மர்மநபர் ஆஸ்பத்திரியை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் அவர் நிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீட்டா அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின் போில் டி.பி. மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் மிஸ்ரா என்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த மும்பை போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்